Tamil Eelam vs Hmong I CONIFA Asia Cup 2023 I தமிழீழ அணி vs எச்மொங்
போர்துக்கலில் இடம்பெற்ற ஆசிய கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியில் தமிழீழ அணி வெற்றிவாகை சூடியுள்ளது.அடுத்த வருடம் குருதிஸ்தானில் நடைபெறவிருக்கின்ற கொனீபா உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டிக்கான தகுதிகாண் போட்டியாக இது இடம்பெற்றிருந்தது.
இதில் எச்மொங் அணியுடன் களமாடிய தமிழீழ அணி, 3க்கு 1 என் கோல் கணக்கில் வெற்றியீட்டியுள்ளது.தேசமாக அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கு இடையிலான போட்டியாக இது இடம்பெற்றிருந்தது.பிரான்ஸ், கனடா , சுவிஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளில் தமிழீழ அணிக்கான வீரர்கள் அணிதிரண்டிருந்தனர்.
அடுத்த ஆண்டு குருதிஸ்தானில் நடைபெறவிருக்கின்ற கொனீபா உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் 16க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கெடுக்க இருக்கின்ற நிலையில், அதற்கான தகுதிகாண் போட்டியில் தமிழீழ அணி வெற்றி பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது