TGTE TV
TGTE TV 18 Nov 2023

Up next

அம்பலமாகிய அனுராவின இனநாயக அரசியல் உண்மைகள் ! V.Rudrakumaran I TGTE
10 Oct 2024
அம்பலமாகிய அனுராவின இனநாயக அரசியல் உண்மைகள் ! V.Rudrakumaran I TGTE
TGTE TV · 802 Views

Tamil Eelam National Flag Day to Be Observed Around the World on November 21st - TGTE

539 Views
In News

⁣ஏறக்குறைய நான்கரை நூற்றாண்டு காலனிய ஆட்சியில் தமிழர்களிடம் கொடி இல்லை. 1989 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக்கொடியின் முக்கியத்துவத்தை முதன் முதலில் உணர்ந்த மேதகு வேலுப்பிள்ளைபிரபாகரன் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம்திகதி தமிழீழத் தேசியக்கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றிவைத்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றம்அக்டோபர் 24 ஆம் திகதி 2021 ம் ஆண்டு பிரதமர் ருத்திரகுமாரன் தலைமையில் ஏகமனதாக தீர்மானித்து நவம்பர் 21 ஆம் திகதியை தமிழீழத் தேசியக்கொடிநாளாக பிரகடனப்படுத்தியது.

கனடா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும், அமெரிக்காஆகிய நாடுகளில் தேசியக்கொடி நாள் நிகழ்வுகள்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


இந் நிகழ்வுகளில் பறை முழக்கம் , எழுச்சி நடனம், இசைக்குழு அணிவகுப்பு, தாயகப் பாடல்கள், சிறப்புரைகள் ஆகியன இடம்பெறும். அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் இளைய சமுதாயத்திற்கு நடாத்தப்படும் கட்டுரைப் போட்டியில்வெற்றி பெற்றவர்களுக்கான பரிசும், பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படும். கட்டுரைகளின் தலைப்புக்களாக“தமிழ்த் தேசியத்தின் குறியீடு மேதகு வேலுப்பிள்ளைபிரபாகரன்”, தமிழீழக் கொடிநாள்”, “மாவீரர் நாள்” ஆகியன கொடுக்கப்பட்டன.

சிறீலங்காவின் வாளேந்திய சிங்கத்தை சித்தரிக்கும் கொடியின் வடிவமைப்பில் தமிழர்கள் எவரும் பங்கேற்கவில்லை. சிறீலங்காக் கொடியை தமிழர்கள் எவரும் ஏற்கவும் இல்லை. சிறீலங்காக் கொடி, 1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களிடம் வீழ்ச்சி அடைந்ததன் 100 வது ஆண்டான 1915 ஆம்ஆண்டு சிங்களப் புத்திஜீவிகளால் உருவாக்கபட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேசியக் கொடி நாள் பிரகடனத்தில், தமிழீழத் தேசியக்கொடி, தமிழீழத்தின் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் குறிக்கின்றது எனவும் மற்றும் இக்கொடி உலகம் முழுவதிலும் உள்ள தமிழீழ தேசத்தைச்சேர்ந்த அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது எனவும்குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இப் பிரகடனத்தில் தமிழீழத் தேசியக்கொடி, தமிழீழ தேசம் அந்நிய ஆட்சியிலிருந்தும், சிங்களபௌத்த மேலாதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்கும் தமிழீழ தேசம் செய்த அளவிட முடியாத உன்னத தியாகத்தை நினைவூட்டுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடி நாள் பிரகடனத்தில் இறுதியாக சுயனிர்ணய உரிமையின் அடிப்படையிலும், மீண்ட இறைமையின் அடிப்படையிலும், ஈடு செய் நீதியின் அடிப்படையிலும், சமூக நீதி நிலவும் தமிழீழத்தை அமைப்பதற்கு உறுதியுடனும், திடசங்கற்பத்துடனும் உழைப்போம் என உலகிற்கு உரத்த குரலில் எடுத்து சொல்வோம் எனக் குறிக்கின்றது.

The TGTE Parliament has proclaimed that every year since 2021, November 21 will be observed as Tamil Eelam National Flag Day.

Tamils did not have a flag during the nearly four and a half centuries of colonial rule. It was the Tamil National Leader Hon. Velupillai Prabhakaran who recognized the importance of the flag for the Tamil Nation kin 1989, introduced and hoisted it on the 21st of November 1990.

The parliament of the Transnational Government of Tamil Eelam (TGTE) on October 4 th resolved and declared November 21st as the Tamil Eelam National Flag Day.

In the TGTE National Flag Day proclamation it is stated inter alia that “[T]his flag which represents all the people belonging to the Nation of Tamil of Tamil Eelam across the globe stands for the sovereignty, and the right to self-determination of the Tamil Eelam Nation. It is a reminder of the immeasurable supreme sacrifice made by the Eelam Tamil Nation fighting for it’s retrieval and emancipation from foreign rule and Sinhala Buddhist hegemony. "

The proclamation concludes “On this , the Tamil Eelam National Flag Day, we solemnly swear by the flag we proudly hold, and loudly proclaim for the whole world to hear that, on the basis of the right to self-determination, reversion to sovereignty and remedial justice the Tamil Eelam People based on human ethics we would courageously with indomitable spirit to establish our rightful Independent state of Tamil Eelam and a free society where social justice prevails , overcoming all and any obstacles that may come to our way”.

National Flag Day events have been organized in Canada, France, U. K and U.S.A. The agenda includes Rallying beats of Parai Drum, Marching Bands, Dances of the Arising, Homeland songs, Inspirational speech etc. Awards and Certificates of Participation will be given to the second generation who participated in the essay competition organized by the TGTE in connection with the National Flag Day.

The topics of the essays are:
“Hon. Velupillai Prabhakaran symbol of the Tamil Nationhood,”
Tamil Eelam National Flag Day” and
“Maveerar Day (Heroes Day)”.

It is pointed out that the Tamils neither participated in the design of the Sri Lankan flag, nor accepted the Sri Lankan flag, which depicts a lion with a sword. This image was conceived by the Sinhala elites in 1915. the hundred anniversary of the fall of the Kandy Kingdom to the British.

Show more
0 Comments sort Sort By

Up next

அம்பலமாகிய அனுராவின இனநாயக அரசியல் உண்மைகள் ! V.Rudrakumaran I TGTE
10 Oct 2024
அம்பலமாகிய அனுராவின இனநாயக அரசியல் உண்மைகள் ! V.Rudrakumaran I TGTE
TGTE TV · 802 Views