TGTE TV
TGTE TV 17 Jul 2022

التالي

அம்பலமாகிய அனுராவின இனநாயக அரசியல் உண்மைகள் ! V.Rudrakumaran I TGTE
10 Oct 2024
அம்பலமாகிய அனுராவின இனநாயக அரசியல் உண்மைகள் ! V.Rudrakumaran I TGTE
TGTE TV · 911 المشاهدات

T.இராஜேந்தர் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஈழத்தமிழர்கள் சந்திப்பு I T Rajendar I V.Rudrakumaran

959 المشاهدات
في

திரை இயக்குனர் டி ராஜேந்தர், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் வி.உருத்திரமாரன் சந்திப்பு

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வருகை தந்திருந்த தமிழக பன்முக கலைஞரான திரைப்பட இயக்குனர், ஈழத்தமிழர் ஆதரவாளர் திரு.டி.ராஜேந்தர் அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையில், தற்போது குணமடைந்து ஒய்வெடுத்து வருகின்றார்.

ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கு தனது தோழமையினையும் உறுதுணையினையும் வெளிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதோடு, பல போராட்டங்களையும் தமிழ்நாட்டில் முன்னெடுத்துள்ளார்.

உயர் சிகிச்சை நிறைவுற்று ஓய்வில் இருக்கும் திரு.டி.ராஜேந்தர்களை அவர்களை நலன்விசாரித்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், ஈழத்தமிழர் போராட்டத்துக்கான அவரது உறுதுணைக்கு நன்றி தெரிவித்திருந்ததோடு, பூரண குணமடைந்து நிறைந்த ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் ஊர் திரும்புவதற்கு வாழ்த்துரைத்தார்.

இச்சந்திப்பில் நியூ யோர்க் வாழ் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணைக்குழு உறுப்பினர்களும் பங்கெடுத்திருந்ததோடு, வட அமெரிக்க தமிழ்சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு.பாலா சுவாமிநாதன் அவர்களும் பங்கெடுத்திருந்தார்.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் மீதான தனது மன உணர்வுகளை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்திய டி.ராஜேந்தர் அவர்கள், நியூ யோர் மண்ணில் ஈழத்தமிழ் உறவுகளை சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார். வட அமெரிக்க தமிழ்சங்கங்களின் பேரவைக்கு புதிதாக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் திரு.பாலா சுவாமிநாதன் அவர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

أظهر المزيد
0 تعليقات sort ترتيب حسب

التالي

அம்பலமாகிய அனுராவின இனநாயக அரசியல் உண்மைகள் ! V.Rudrakumaran I TGTE
10 Oct 2024
அம்பலமாகிய அனுராவின இனநாயக அரசியல் உண்மைகள் ! V.Rudrakumaran I TGTE
TGTE TV · 911 المشاهدات