TGTE TV
TGTE TV 09 Aug 2023

Suivant

நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமரின் தமிழீழத் தேசியக் கொடிநாள் செய்தி !
22 Nov 2025
நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமரின் தமிழீழத் தேசியக் கொடிநாள் செய்தி !
TGTE TV · 204 Vues

விளையாட்டு விழா | 05 August 2023 | கனடா | நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

805 Vues
Dans

⁣நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி 2023 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 5, காலை 10 மணிக்கு Birchmount Stadium இல் கனேடிய, தமிழீழத் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, நீண்ட விடுதைப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்கள், கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவு கூர்ந்து விளையாட்டுகள் ஆரம்பிக்கப்பட்டது.

“விளையாட்டால் ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளுக்கு அமைய 50M, 75 M, 100 M, 200M, 400 M ஓட்டம் , தட்டெறிதல், குண்டெறிதல், கயிறிழுத்தல் ஆகிய நிகழ்வுகளில் சிறுவர்கள் பங்குபற்றியதுடன், வேகநடை, கயிறிழுத்தல் ஆகிய நிகழ்வுகளில் சிறுவர்களின் பெற்றோர்களும் பங்குபற்றி நிகழ்வில் ஒன்றிணைந்து சிறப்பித்து இருந்தார்கள். அதில் கயிறிழுத்தல் போட்டியில் இரன்டு முறையும் பெண்களே முதல் இடத்தைப் பிடித்து அவர்களின் வீரத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.


இதன்போது பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் தனியான கொட்டகை போட்டு மாதிரி வாக்கெடுப்பை நிகழ்த்தினார்கள். இதன்போது வருகைதந்த பெற்றோர் மற்றும் இளையோர் , பொதுமக்கள் எனப்பலரும் ஆர்வத்துடன் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கனேடிய, தமிழீழ தேசியக் கொடிகள் இறக்கப்ப்ட்டு விளையாட்டுப் போட்டி சிறப்பாக நிறைவேறியது.

Montre plus
0 commentaires sort Trier par

Suivant

நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமரின் தமிழீழத் தேசியக் கொடிநாள் செய்தி !
22 Nov 2025
நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமரின் தமிழீழத் தேசியக் கொடிநாள் செய்தி !
TGTE TV · 204 Vues