கோத்தபாயசுற்றுலாப்பயணி அல்ல ! தப்பி வைத்த இனப்படுகொலையாளி !! கைது செய் நீதியின் முன் நிறுத்து ! TGTE
சிறிலங்காவின் இன்றைய நிலை போன்று 1998ம் ஆண்டு இந்தோனேசியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சிறிலங்காவின் ஜனாதிபதி பதவி துறந்தது போன்று இந்தோனேசியாவிலும் நிகழ்ந்தது.
இன்று சிறிலங்காவில் புதிய ஜனாதிபதி பதவிக்கு வருவது போன்று, இந்தோனேசியாவிலும் புதிய ஜனாதிபதி வந்திருந்தார். அவர் இந்தோனேசியாவில் மறுசீரமைப்பு செய்து நாட்டின் ஓர் அங்கமாக இருந்த கிழக்கு தீமோரின் பொதுவாக்கெடுப்பு ஆதரவு தெரிவித்திருந்தார்.
அதனைத்தான் நாமும் வலியுறுத்துகின்றோம். ஆயினும் சிறிலங்காவில் புரையோடிப் போயுள்ள இனநாயகம் இதற்கு சம்மதிக்காது என்பதனையும் சிறிலங்காவின் வரலாற்றின் ஊடாக பார்கின்றோம்.
ஆயினும் சர்வதேச அவதானிப்பு சிறிலங்கா நோக்கி அதிகம் தற்போது உள்ளதால், சர்வதேச தளத்தில் பொதுவாக்கெடுப்புக்கான ஆதரவினை திரட்டும் செயற்பாடுகளை அதிகரிக்க இருக்கின்றோம்.
மற்றும் இன்று இனப்படுகொலையாளியும், அமெரிக்காவினால் பயணத்தடைக்கு உள்ளாகியிருக்கும் சர்வேந்திர டி சில்வா, சிறிலங்கா அரசியலில் முக்கிய ஒருவராக தற்போதயை காணப்படுகின்றார். இந்த சூழலில் பொறுப்புக்கூறலில் உள்நாட்டுரீதியாக தீர்க்கலாம் என்பதற்கு வாய்ப்போ வெளியோ இல்லை.
மேலும் சட்டத்தின் ஆட்சியினை கூறும் கிளர்ச்சிக்காரர்களிடம், அதனொரு அம்சமாக சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைய ரோம் பின்னோக்கிய நிலையில் இருந்து கையொப்பமிட்டு, சிறிலங்காவை சர்வதேசத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நியாயாதிக்கத்துக்குள் உட்படுத்த வேண்டும் கோருகின்றோம்.
சிறிலங்கா 'ரோம்' உடன்படிக்கையில் கையொப்பமிட வேண்டும் என்ற கோரிக்கை, 2015ம் ஆண்டு ஐ.நாவின் அன்றைய ஆணையாளர் அல் உசேன் அவர்களால் முன்வைகப்பட்டமையினையும் சுட்டிக்காட்டுகின்றோம்.